Oct 06, 2020 01:24 PM

பிரபல சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்! - போலீஸ் விசாரணை

பிரபல சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்! - போலீஸ் விசாரணை

’சித்தி’, ‘வாணி ராணி’, ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்துக் கொண்டார்.

 

தற்போதும் பல தொடர்களில் நடித்து வரும் சாந்தி வில்லியம்ஸ், ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ராவின் அம்மாவாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சாந்தி வில்லியம்ஸின் ஒரே மகன் சந்தோஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணமான சந்தோஷுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், எந்த நேரமும் மது போதையிலேயே இருப்பார், என்றும் கூறப்படுகிறது.

 

Shanthi Williams

 

நேற்று தனது அறையில் படுத்து தூங்கிய சந்தோஷ், இன்று காலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறைக்கு சென்று பார்த்த போது அவர் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். 

 

இதையடுத்து, போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீஸார், சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.