Sep 09, 2020 12:45 PM

டிக்டாக்கால் நடந்த விபரீதம்! - சீரியல் நடிகை தற்கொலையின் பகீர் பின்னணி

டிக்டாக்கால் நடந்த விபரீதம்! - சீரியல் நடிகை தற்கொலையின் பகீர் பின்னணி

டிக்-டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் சாமாணிய மக்களும் சில நாட்களில் பிரபலமாவதால், அதில் பலர் தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். பலர் ஆபாசமாக தங்களைக் காட்டி வீடியோ வெளியிட்டு வர, அதுவே அவர்களது வாழ்க்கையில் பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

 

அப்படி ஒரு விபரீதத்தில் சிக்கி தனது உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் பிரபல சீரியல் நடிகை ஸ்ரவாணி. ‘மனசு மம்தா’ என்ற சீரியல் மூலம் தெலுங்கு சீரியல் உலகில் பிரபலமான ஸ்ரவாணி, தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த நிலையில், நேற்று ஐதராபாத்தின் எசார் நகர் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துக் கொண்டார்.

 

ஸ்ரவாணியின் தற்கொலை தெலுங்கு சீரியல் உலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அவரது தற்கொலைக்கான பின்னணி குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஸ்ரவாணியின் தற்கொலைக்கு டிக்-டாக் பிரபலம் தேவராஜ் தான் காரணம், என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

டிக்-டாக் மூலம் தேவராஜிக்கும் ஸ்ரவாணிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல தெலுங்கு டூயட் பாடல்களுக்கு டிக் டாக் செய்த நிலையில், நட்பாக பழகியவர்கள் பிறகு காதலித்துள்ளார்கள். இதனால், ஸ்ரவாணியும், தேவராஜும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார்கள்.

 

Sravani

 

ஆனால், ஸ்ரவாணியை திருமணம் செய்வதாக அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்த தேவராஜ், அவரை திருமணம் செய்ய மறுத்ததோடு, தங்களுக்கு இருவருக்கும் இடையே இருந்த காதல் நெருக்கத்தை வைத்து அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரவாணி தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார், என்று அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.