Apr 02, 2019 11:51 AM
மீண்டும் படம் இயக்க தயாரான பிரபு தேவா! - ஹீரோ இவர் தான்

நடன இயக்குநர், இயக்குநர் என்று இந்திய சினிமாவை கலக்கிய பிரபு தேவா, பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் படம் இயக்க தயாராகியுள்ள பிரபு தேவா, தான் இயக்கும் புதுப்படத்திற்கு நேற்று பூஜை போட்டிருக்கிறார்.
ஆம், பிரபு தேவா ‘தபாங் 3’ படத்தை இயக்குகிறார். சல்மான்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அவரே தயாரிக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிரது.
ஏற்கனவே வெளியான தபாங் முதல் இரண்டு பாகங்களிலும் சல்மான்கான் தான் ஹீரோவாக நடித்தாலும், இயக்குநர்கள் வெவ்வேறானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.