Nov 23, 2020 07:04 AM
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.ராஜேந்தரை வீழ்த்தி முரளி வெற்றி

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், டி.ராஜேந்தர் தலைமையிலான அணிக்கும், மறைந்த இராம.நாராயணனி மகன் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று காலையில் தொடங்கியது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார்.