Aug 12, 2020 10:47 AM

நண்பனை கிருஷ்ணனாக்கிய நடிகர் துரை சுதாகர்

நண்பனை கிருஷ்ணனாக்கிய நடிகர் துரை சுதாகர்

நண்பன் என்று சொல்லிவிட்டு ஒரு குழந்தை புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்களே, என்று எண்ண வேண்டாம். இவர் தான் நண்பன். அதாவது இந்த குழந்தை பெயர் நண்பன். கேட்டாலே அதிருதுல. ஆமாங்க, ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக கலக்கி, சமீபத்தில் ZEE5-ல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘டேனி’ படத்தில் காவல் துறை அதிகாரியாக மிரட்டிய நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் மகன் தான் இந்த நண்பன்.

 

கிருஷ்ண ஜெயந்திக்காக தனது குழந்தை நண்பனை கிருஷ்ணரைப் போல அலங்காரம் செய்து அழகு பார்த்திருக்கும் நடிகர் துரை சுதாகர், குழந்தைக்கு இப்படி ஒரு வித்தியாசமான பெயர் வைத்தது குறித்து கூறுகையில், “நட்பும், நண்பனும் ஒவ்வொருவரது வாழ்விலும் மிக முக்கியம். அந்த வார்த்தையும் மிக வலிமை வாய்ந்தது. எனவே தான், என் குழந்தைக்கு ’நண்பன்’ என்று பெயர் வைத்தேன்.

 

இந்த பெயரை நான் தேர்வு செய்த போது, என் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், ஏன், சிலர் இப்படி ஒரு பெயரா? என்று கூட கேட்டார்கள். “நீ யார்? என்று எதிரிகள் கேட்டால் கூட, “நண்பன்” என்று கூறி, இந்த உலகத்தில் அத்தனை பேருக்கும் என் மகன் நண்பனாக இருப்பான், என்று கூறி, இந்த பெயர் வைப்பதில் நான் உறுதியாக இருந்தேன்.” என்றார்.

 

கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தைப்பூச திருநாளில் பிறந்த நண்பன் தற்போது ஆறு மாதங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவரது புகைப்படத்தை, நடிகர் துரை சுதாகர் முதல் முறையால பொது தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Durai Sudhakar baby Nanban

 

Durai Sudhakar baby Nanban

 

Durai Sudhakar baby Nanban

 

Durai Sudhakar baby Nanban