Apr 02, 2019 10:38 AM

மகேந்திரன் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

மகேந்திரன் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

ல்நலக் குறைவால் இன்று உயிரிழந்த பிரபல இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

’முள்ளும் மலரும்’, ‘மெட்டி’, ‘ஜானி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் மகேந்திரன், சமீபகாலமாக சில படங்களில் நடிக்கவும் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டில் மகேந்திரன் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இயக்குநர் பாரதிராஜா, மகேந்திரன் உடலைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார்.