Apr 10, 2019 05:39 AM

ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் ரஜினிகாந்த்! - பிரபலம் வெளியிட்ட தகவல்

ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் ரஜினிகாந்த்! - பிரபலம் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்த், தனது புது படம் ரிலீஸின் போது, அரசியல் குறித்து எதாவது பேசி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது அவரது புது படமான ‘தர்பார்’ படத்தின் பஸ்ட் லுக் வெளியாகியிருப்பதோடு, அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குகிறது.

 

இதற்கிடையே, மும்பை செல்வதற்கு முன்பு சென்னையில் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை புகழ்ந்து வரவேற்றிருக்கிறார். ரஜினிகாந்தின் இத்தகைய பேட்டிக்கு தமிழக அரசியல் கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ரஜினிகாந்த் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.

 

Thol Thirumavalavan

 

இது குறித்து அரியலூரில் நேற்று நிருபர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ரஜினிகாந்த் பேட்டியை பார்த்து, எனக்கு அதிர்ச்சியோ, வியப்போ இல்லை. ரஜினிகாந்த், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு இது மேலும் ஒரு சான்று. ரஜினிகாந்த்தின் நிலைப்பாடு மக்களிடம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்திருக்கிறார்.