Jan 08, 2018 08:11 AM

ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படம்! - இயக்குநர் யார் தெரியுமா?

ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படம்! - இயக்குநர் யார் தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’, ‘காலா’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையே ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, அதன் மூலம் வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளார். இதனால் ரஜினிகாந்த் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார்.

 

இந்த நிலையில், ‘2.0’ மற்றும் ‘காலா’ படத்திற்கு பிறகு இறுதியாக ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் ரஜினிகாந்த், அரசியல் சம்மந்தமான படமாக அப்படம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். மேலும், இயக்குநர்கள் பா.ரஞ்சித்திடம் அரசியல் சார்ந்த கதை எதாவது இருக்கிறதா? என்று கேட்டிருப்பவர், ஷங்கரிடம் ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் எடுத்தால் அதில் தான் நடிப்பதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

 

எப்படியும் ரஜினிகாந்தின் இறுதிப் படம் அரசியல் படம் தான் என்று உறுதியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவும் ரஜினி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.