Apr 04, 2019 12:47 PM

மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன்!

மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன்!

35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தற்போதும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், ஹீரோயின், வில்லி, அம்மா, அக்கா என அனைத்து வேடங்களிலும் நடித்து வருகிறார்.

 

ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் ராஜமாதா வேடத்தில் நடித்து பெரும் பாராட்டை பெற்றார்.

 

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே, அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக இந்தி படம் ஒன்றில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் ஜோடியாக நடிக்கிறார்.

 

Ramya Krishnan and Amitap Pachan

 

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் மூலம் அமிதாப் பச்சன், நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் தான் ரம்யா கிருஷ்ணன், அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகிறது.

 

Sj Surya and Amitaph Pachan