ரஜினி படம் குறித்து பரவும் வதந்தி! - பதறிய படக்குழு

’பேட்ட’ யை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஜினியின் புதிய படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஜினி தரப்பு மறுத்திருக்கிறது.
மேலும், ரஜினிகாந்தின் 167 படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக வெளியான தகவல் மற்றும் செய்திகள் அனைத்தும் பொய். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரபரப்ப வேண்டாம், என்றும் ரஜினி தரப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முழுவதுமாக முடிவடைந்த பிறகு, ரஜினியின் 167 வது பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களை படக்குழுவி வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.