Oct 03, 2020 06:04 PM

பிக் பாஸ் வீட்டின் சவுண்ட் பார்ட்டியான சனம் ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டின் சவுண்ட் பார்ட்டியான சனம் ஷெட்டி!

தொலைக்காட்சி ரசிகர்களின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ள பிக் பாஸின் நான்காவது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக சனம் ஷெட்டி பங்கேற்கிறார். கடந்த மூன்றாவது சீசனின் முக்கிய போட்டியாளரான தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டுக்குள் எண்டியாவது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்ஷன் மாடலிங் துறையில் வளர்ச்சி அடைந்ததற்கும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கும் மிக முக்கிய காரணம் சனம் ஷெட்டி தான். அவர் அதை செய்ய காரணம், தர்ஷன் மீது அவர் கொண்ட காதல் என்பது அனைவரும் அறிந்ததோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியால் சினிமா வாய்ப்பு கிடைத்த பிறகு, சனம் ஷெட்டியை தர்ஷன் உதறியதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். 

 

இந்த நிலையில், சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால், தர்ஷன் உடனா அவரது காதல் பற்றி அவர் நிச்சயம் பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டின் சவுண்ட் பார்ட்டியாதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த நான்காவது சீசனின் முக்கியமான போட்டியாளராகவும் அவர் உருவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

 

அம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, 2016-ஆம் ஆண்டிற்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்டு, மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினையும் வென்றுள்ளார்  

 

கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள இந்த சமயத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ’நம் மக்களின் குரல்’ என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கிய சனம் ஷெட்டி, பல நூறு குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.