Apr 12, 2019 07:12 PM

தாயால் 13 வயதில் இருந்து அனுபவித்த கொடுமைகள்! - சங்கீதாவின் பதிவால் பரபரப்பு

தாயால் 13 வயதில் இருந்து அனுபவித்த கொடுமைகள்! - சங்கீதாவின் பதிவால் பரபரப்பு

பிரபல நடிகை சங்கீதா, தனது தாயை வீட்டை விற்று விரட்டியடித்ததால், அவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, அவர் தனது கணவருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்தால் சங்கீதாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்ததோடு, சமூக வலைதளங்களில் அவர் விமர்சித்தும் கருத்து பதிவிட்டனர்.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகை சங்கீதா, தனது தாயார் சிறு வயதில் இருந்து தான் அனுபவித்த கொடுமைகளை கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

 

இது குறித்து சங்கீதா தனது சமூக வலைதளப்பக்கத்தில், ”பள்ளியில் இருந்து நிறுத்தி 13 வயதிலேயே நடிக்க அனுப்பினீர்கள், என்னிடல் பல பிளாங் செக்கில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டீர்கள், குடிக்கு அடிமையாகி வேலைக்கே போகாத உங்கள் மகன்களுக்காக என்னை சுரண்டினீர்கள், நானாக போராடி வெளியேறும் வரை திருமணம் செய்ய விடவில்லை. என் கணவரை தொல்லை செய்து என் குடும்ப அமைதியை அழித்தீர்கள், இப்போது ஒரு பொய் புகார் அளித்துள்ளீர்கள். 

 

அனைத்திற்கும் நன்றி. உங்களால் தான் நான் சாதாரண குழந்தையாக இருந்து தற்போது போராளியாக நிற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.