Nov 16, 2020 06:45 PM

புதுமுகங்களின் நடிப்பில் உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘அடங்காமை’

புதுமுகங்களின் நடிப்பில் உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘அடங்காமை’

மூன்று சிறுவயது நண்பர்கள். இவர்கள் பெரியவர்கள் ஆனதும் இவர்கள் நட்பு தொடர்கிறது. ஒருவர் அரசியல்வாதி, ஒருவர் நடிகர், ஒருவர் டாக்டர். 

டாக்டரின் காதலியின் அக்கா, வளர்ப்பு தகப்பனார், இருவரும் கொலை செய்யப்பட்டு இறந்து விடுகின்றனர். இந்த நிலையில் டாக்டர் கொலையாளிகளை கண்டு பிடிக்க தனது நண்பர்களை உதவிக்கு நாடுகிறார். நண்பனுக்கு நண்பர்கள் உதவி செய்கிறாரர்களா? என்று பார்த்தால் இறுதியில் கொலையாளிகளே நண்பர்கள் தான் என்பதை டாக்டர் அறிகிறார். 

 

ஒரு நண்பன் எப்படி இன்னொரு நண்பனை பழிவாங்க முடியும்? அது உண்மையான நட்புக்கு அழகல்ல, ஆனால் இயற்கை தீயோரை வாளவிடாது என்பதே கதை.

 

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.கோபால். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டென்மார்க்கை சேர்ந்த கியூரன் இசையமைத்திருக்கிறார். டென்மார்க்கை சேர்ந்த புலேந்திரராசா பொன்னுதுரை, மைக்கேல் ஜான்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.