Apr 01, 2019 05:48 PM
மொராக்கோ நாட்டு பெண்ணை மணந்த தமிழ் நடிகர்!

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகானவர் அசோக். அப்படத்தை தொடர்ந்து ’யுகா’ என்ற படத்தில் நடித்தவர், தொடர்ந்து பல தெலுங்குப் படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில், நடிகர் அசோக் மொராக்கோ நாட்டை சேர்ந்த அலீமா ஜட் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் சமீபத்தில் மொராக்கோ நாட்டில் உள்ள அடிகர் நகரில் நடைபெற்றது.
நடிகர் அசோக் - அலீமா ஜட் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.