Apr 10, 2019 12:07 PM

’தளபதி 63’ படத்தின் இரண்டாம் நாயகி! - யார் தெரியுமா?

’தளபதி 63’ படத்தின் இரண்டாம் நாயகி! - யார் தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். இப்படத்திற்காக சென்னை அருகே உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான கால்பந்து மைதானம் செட் போடப்பட்டுள்ளது.

 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா, நடித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது நாயகியின் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறார்கள். அந்த இரண்டாம் நாயகியாக நடிப்பவர் ‘மேயாதா மான்’ புகழ் இந்துஜா.

 

முதல் படத்திலேயே தனது நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்த இந்துஜா, தொடர்ந்து பல நல்ல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

 

Actress Induja

 

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஜாக்கி ஷெராப் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்துஜாவும் இடம்பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.