Sep 11, 2020 08:09 AM

வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு இது தான் காரணம்? - பிரபலம் வெளியிட்ட தகவல்

வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு இது தான் காரணம்? - பிரபலம் வெளியிட்ட தகவல்

சின்னத்திரை நடிகர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் வடிவேலு பாலாஜி. வடிவேலு போல பேசி காமெடி செய்வதோடு, தனது தனித்துவமான கவுண்டர்கள் மூலம் மக்களை சிரிக்க வைக்க கூடிய இவரது திறமையால், ‘அது இது எது’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பாராட்டு பெற்றார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு பாலாஜி, சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று, இறுதியில் பணம் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கே நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறிய தனியார் மருத்துவனை ஒன்று பல லட்சங்களை கட்டணமாக வசூலித்து விட்டு, அவருக்கு ஒன்றுமில்லை என்று கூறி அனுப்பியதாக, அவரது குடும்பத்தார் புகார் கூறியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், வடிவேலு பாலாஜியுடன் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றிய நிஷா, அவர் சுமார் 4 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்ததாகவும், அதனால் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் பெரிதும் மன உளைச்சல் அடைந்ததாகவும், அதனால் தான் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

உண்மையில் வடிவேலு பாலாஜிக்கு என்ன நடந்தது, என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அவை அனைத்தும் அவர் சம்பாதித்தது, என்றும் அவரது குடும்பத்தார் கூறிய நிலையில், நிஷாவோ அவர் பணம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.