Nov 07, 2020 10:07 AM

இந்த வாரம் வெளியேறிய நபர் இவர் தான்! - பிக் பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

இந்த வாரம் வெளியேறிய நபர் இவர் தான்! - பிக் பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

பிக் பாஸ் சீசன் 4 போட்டியில் தற்போது குரூப்பிஸம் உருவாகி சில மோதல்களும் நிகழ்ந்து வருகிறது. அதே சமயம், வார இறுதி நாட்களில் எலிமினேஷன் நடப்பதால், வெளியேறும் போட்டியாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

 

ரேகா மற்றும் வேல்முருகன் என ஏற்கனவே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் மூன்றாவது போட்டியாளராக ஒருவர் வெளியேறிவிட்டார். அவர் யார்? என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. பிக் பாஸின் நான்காவது சீசனின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்கரவர்த்தி தான் அவர்.

 

Suresh Chakravarthy

 

சுரேஷ் சக்கரவர்த்தி போட்டியின் முக்கிய போட்டியாளர் மற்றும் நிகழ்ச்சிக்கான கண்டெண்ட்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததால் அவர் எளிதாக எளிமினேட் ஆக மாட்டார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.