Aug 17, 2020 02:31 PM

ரஜினி, கமலை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் கோலிவுட் ஹீரோ?

ரஜினி, கமலை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் கோலிவுட் ஹீரோ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலர் நேரடி அரசியலில் இறங்கியுள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், ரஜினிகாந்த் தான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன், என்று அறிவித்தார். ஆனால், இதுவரை அவர் கட்சி குறித்து அறிவிக்கவில்லை என்றாலும், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், ரஜினி, கமலை தொடர்ந்து நடிகர் விஜயும் விரைவில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த முன்னணி வழக்கறிஞர் ஒருவரிடம் விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே, விஜய் தனது ரசிகர் மன்ற நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளைப் போல மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும், தனது திரைப்படங்கள் மற்றும் திரைப்பட விழாக்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசியும் வருகிறார். இதனால், விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

Vijay

 

தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை தற்போது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பலருக்கு அரசியல் கட்சி தொடங்குவது, அதனை பதிவு செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துக் கொடுத்த டெல்லி வழக்கறிஞரிடம் விஜய் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

 

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் கோலிவுட்டில் இது குறித்து பலர் பேசி வருகிறார்கள்.