Aug 25, 2020 03:16 PM

’ஆர்டிக்கல் 15’ தமிழ் ரீமேக்கின் ஹீரோவான உதயநிதி

’ஆர்டிக்கல் 15’ தமிழ் ரீமேக்கின் ஹீரோவான உதயநிதி

அமிதாப் பச்சன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தி திரைப்படமான ‘பிங்க்’-கை தமிழில் அஜித்தை வைத்து ‘வலிமை’ என்ற பெயரில் ரீமேக் செய்த போனி கபூர், தற்போது ‘ஆர்டிக்கல் 15’ என்ற இந்திப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

 

ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் வழங்கும் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் என்பவர் தயாரிக்க, ‘கனா’ புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட படக்குழுவினர், பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

 

Article 15

 

தீவிர அரசியலில் இறங்கியதால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட உதயநிதி, இப்படத்திம் கதைக்களம் நாட்டில் நடக்கும் அவலங்களை தோலுறித்துக் காட்டுவதாக இருந்ததால், நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டுள்ள ராகுல், தனது சினிமா பயணத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.