Apr 08, 2019 07:34 PM

சூர்யாவால் தோல்வியடைந்த ‘உறியடி 2’!

சூர்யாவால் தோல்வியடைந்த ‘உறியடி 2’!

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு நான்கு முதல் ஆறு படங்கள் வரை வெளியாகிறது, ஆனால், இதில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் சென்றடைகிறது. ஒரு சில ஏன், ஒரு படம் தான். இதற்கு காரணம், இப்படி கொத்தாக படங்கள் வெளியாவது ஒன்றாக இருந்தாலும், சரியான முறையில் தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்யாததும் ஒரு காரணமாக இருக்கிறது.

 

அதிலும், பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படம் ஒன்று, விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற பிறகும் தோல்வியடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘உறியடி 2’ நல்ல படம் என்று விமர்சகர்கள் மூலம் பாராட்டு பெற்றலாம், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதாக சினிமா வியாபாரிகள் சிலர் கூறியிருக்கிறார்கள்.

 

அதற்கு முக்கிய காரணம், படத்திற்கு தயாரிப்பாளரான நடிகர் சூர்யா போதிய விளம்பரம் செய்யாமல் போனது தானாம். இந்த படத்திற்கு தியேட்டர் கிடைத்ததே அது சூர்யாவின் படம் என்பதால் தான். காரணம் படத்தில் ஹீரோ உள்ளிட்ட எந்த நடிகர்களும் பரிச்சயமானவர்கள் இல்லை. படத்தின் இயக்குநர் விஜயகுமார் தான் ஹீரோ. மற்ற நடிகர் நடிகைகளும் புதுமுகங்கள், அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களாக இருப்பதால், படத்திற்கு சரியான முறையில் விளம்பரம் செய்திருந்தால் படம் நிச்சயம் குறைந்தது 3 வாரமாவாது ஓடியிருக்குமாம்.

 

ஆனால், சூர்யாவின் மற்றும் 2டி நிறுவனத்தின் மெத்தன போக்கினால், படம் வெளியான முதல் நாளே கூட்டம் வராமல் காட்சிகள் ரத்தானதாகவும், படம் வெளியானதில் இருந்து இரவுக் காட்சிகளே கொடுக்கப்படவில்லை, என்றும் கூறப்படுகிறது.