Jul 25, 2020 09:30 AM

வாணி போஜனின் முதல் திரைப்படம்! - ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸ்

வாணி போஜனின் முதல் திரைப்படம்! - ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸ்

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் பிரபல சீரியல் நடிகை வாணி போஜன், தற்போது வெள்ளித்திரை நடிகையாகி விட்டார். வாணி போஜனின் முதல் படமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

 

இந்த நிலையில், வாணி போஜனை சினிமாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. அதாவது, வாணி போஜன் ‘லாக்கப்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். ஆனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், அவரது இரண்டாவது படம் ரிலீஸாகிவிட்டது.

 

எப்படியோ, வாணி போஜனின் முதல் திரைப்படமான ‘லாக்கப்’ வரும் ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி முன்னணி ஒடிடி தளமான ZEE5-ல் வெளியாகிறது.

 

Lockup

 

நடிகர் நிதின் சத்யா தயாரித்திருக்கும் ‘லாக்கப்’ படத்தில் ஹீரோவாக வைபவ் நடிக்க, மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடித்திருக்கிறார். இவர்களுடன் பூர்ணா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அரோல் குரோலி இசையமைத்திருக்கிறார். சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் ஜெரால்ட் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆனந்த மணி கலையை நிர்மாணித்துள்ளார்.