Jul 27, 2020 01:15 PM

மீண்டும் ட்விட்டரில் இணைந்த வனிதா! - அஜித் பற்றி வெளியிட்ட பதிவுக்கு எதிர்ப்பு

மீண்டும் ட்விட்டரில் இணைந்த வனிதா! - அஜித் பற்றி வெளியிட்ட பதிவுக்கு எதிர்ப்பு

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் மற்றும் அதனை சுற்றிய செய்திகளால் சோசியல் மீடியா உலகம் கடந்த சில நாட்களாகவே சூடாக உள்ளது. வனிதாவின் மூன்றாம் திருமணம் முடிந்து ஒரு மாதமாகியும், இந்த சூடு இன்னும் தனியவில்லை.

 

இதற்கிடையே, வனிதா தன்னை விமர்சித்தவர்களை கடுமையாக விமர்சித்ததால், அவருக்கு எதிராக ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். அதனை எதிர்கொள்ள முடியாத வனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் இருந்து விலகினார்.

 

இந்த நிலையில், மீண்டும் ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பியுள்ள வனிதா, அஜித் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அஜித் பற்றிய பதிவுக்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், ஏராளமான அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

அஜித்தின் இந்த வெற்றி யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று, ஆனால் அதற்கு அவர் தகுதியுடையவர் தான். நாங்கள் ஒரே சமயத்தில் சினிமா துறைக்கு வந்தோம். இங்கு நல்லவைகளையும், கெட்டவைகளையும் சந்தித்தோம். நான் சந்தித்த மிக உண்மையான, எளிமையான, மனிதர்களில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுக்கு அனைத்து சிறப்புகளையும் கொடுப்பார். ஷாலுவுக்கும் எனது வாழ்த்துக்கள், என்று வனிதா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

வனிதா தனது பதிவில் அஜித்தை புகழ்ந்திருந்தாலும், அதற்கு அஜித் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆச்சரியமில்லை. காரணம், வனிதா செய்வதை சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பது என்பது புதிதல்ல.

 

ஏற்கனவே விஜய் பற்றியும், அவருடன் நடித்தது பற்றியும் வனிதா ட்விட்டரில் பகிர்ந்த போது கூட இதுபோல எதிர்ப்பும் வரவேற்பும் சேர்ந்த வந்தது.