Oct 21, 2020 06:38 AM

என்னை வச்சி பணம் சம்பாதித்தார் - வனிதா பரபரப்பு புகார்

என்னை வச்சி பணம் சம்பாதித்தார் - வனிதா பரபரப்பு புகார்

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அவரை பிரபலங்கள் பலர் விமர்சித்தாலும், தனது புது கணவருடன் தான் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். 

 

இதற்கிடையே, வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை வீட்டை விட்டு விரட்டியதாக தகவல் வெளியாக, பிறகு வனிதாவே பீட்டர் பாலை தான் பிரிந்தது உண்மை தான், ஆனால் அவரை நான் விரட்டியடித்ததாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை, என்று கூறியதோடு, தான் காதலில் தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

 

இந்த நிலையில், பீட்டர் பாலுக்கும் தனக்கும் என்ன பிரச்சினை, அவரை தான் பிரிய காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வனிதா அந்த வீடியோவில், தனது பி.ஆர்.ஓ தான் தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியிருப்பதோடு, அந்த பி.ஆர்.ஓ தன்னை வைத்து அதிகமான பணம் சம்பாதித்துவிட்டதாகவும், தெரிவித்துள்ளார்.

 

அவர் யார்?, பீட்டர் பாலுக்கும், வனிதாவுக்கும் இடையே எதனால் மோதல் ஏற்பட்டது? ஆகிய கேள்விகளுக்கு வனிதா அளித்த பதில் இதோ,