3 வது கணவர் பீட்டர் பாலை பிரிந்தது ஏன்? - வனிதா ஓபன் டாக்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3 வது திருமணம் செய்துக் கொண்ட வனிதா பெரும் சர்ச்சையில் சிக்கினார். அவரது மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் விமர்சித்ததோடு, பீட்டர் பாலின் முதல் மனைவி போலீசில் புகாரும் அளித்தார். ஆனால், எதையும் கண்டுக் கொள்ளாத வனிதா, பீட்டர் பாலுடன் உல்லாசமாக ஊர் சுற்றியதோடு, சமீபத்தில் கோவாவுக்கும் சென்று வந்தார்.
இதற்கிடையே, வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்து விட்டதாகவும், பீட்டர் பாலை வனிதா தனது வீட்டில் இருந்து விரடியடித்து விட்டதாகவும் தகவல் வெளியாக, விசாரித்ததில் அது உண்மை என்று தெரிய வந்தது. தற்போது பீட்டர் பாலும், வனிதாவும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில், பீட்டர் பாலை பிரிந்தது உண்மை தான் என்று கூறியிருக்கும் வனிதா, அவரை தான் விரட்டியடிக்க வில்லை என்றும், உண்மை தெரியாமல் என் மீது பழி போட வேண்டாம், என்றும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், வனிதா பீட்டர் பாலை பிரிய அவர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பதும், வனிதா எவ்வளவு சொல்லியும் அவர் அந்த பழக்கத்தை கைவிடவில்லையாம். மேலும், மதுவுக்கு அடிமையான பீட்டர் பால் அப்பழகத்தை விட்டுவிட்டதாக கூறியிருந்தாராம். ஆனால், சமீபத்தில் மீண்டும் மது குடிக்கவும் தொடங்கியிருக்கிறார்.
இந்த காரணங்களால் பீட்டர் பாலுக்கும், வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் வாக்குவாதமும் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சிலர் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், அவர் இனி சினிமாவில் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது. எனவே அவரை பார்த்துக் கொள்வதோடு, அவரது மருத்துவ செலவையும் வனிதாவே கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தான், வனிதா அவரை பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.