Feb 10, 2018 09:25 AM

விபத்தில் சிக்கிய விஜய் பட வில்லன் நடிகர் - மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் சிக்கிய விஜய் பட வில்லன் நடிகர் - மருத்துவமனையில் அனுமதி

இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் வித்யூத் ஜமால். வில்லன் மற்றும் ஹீரோவாக பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித்தின் ‘பில்லா 2’ படத்திலும் வில்லனாக நடித்தவர், சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தில் முக்கியமான பாசிட்டிவான வேடத்தில் நடித்திருந்தார்.

 

தற்போது ஜங்கிளி என்ற இந்தி படத்தில் நடித்து வரும் வித்யூத், அதன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். நேற்று அப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது, ஜன்னல் வழியாக வெளியே குதிப்பது போன்ற ஒரு காட்சியில் வித்யூத் நடித்தார். அவரது உடலில் கயிறு கட்டி பாதுகாப்பாக குதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து. ஆனால், வெளியே குதிக்கும் போது எதிர்பாரதவிதமாக அவரது தலையில் அடுபட்டி படுகாயம் அடைந்தார்.

 

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வியூத் படுகாயம் அடைந்திருப்பதால் ஜங்கிளி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.