Feb 07, 2018 12:53 PM

‘விஸ்வாசம்’ படத்திற்காக ரெடியான செட் - களமும் இது தானாம்!

‘விஸ்வாசம்’ படத்திற்காக ரெடியான செட் - களமும் இது தானாம்!

அஜித் - இயக்குநர் சிவா இணையும் படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே தலைப்பு அறிவிக்கப்படும். ஆனால், இந்த கூட்டணியின் 4 வது படமான ‘விஸ்வாசம்’ படத்திற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக தலைப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், ஹீரோயின் தேர்வில் ஈடுபட்டு வந்த படக்குழு நயந்தாராவை ஒப்பந்தம் செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இன்று இசையமைப்பாளராக டி.இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

ஹீரோயின், வில்லன் நடிகர் என அனைவரும் தேர்வு செய்யப்பட்டுவிட்டாலும், படப்பிடிப்பு மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறிவந்த நிலையில், சத்தமில்லாமல் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வட சென்னை தான் கதைக் களம். இதில் அஜித் வட சென்னை தாதாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், படத்தில் நயந்தாராவுடன் மற்றொரு ஹீரோயினும் நடிக்கிறாராம். அவர் யார் என்பது சஸ்பென்ஸாம்.

 

இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஸ்டிடியோ ஒன்றில் ‘விஸ்வாசம்’ படத்திற்காக வட சென்னை செட் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த செட்டில் தான் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.