வடிவேலு யாரை அடித்தாலும், இவரை மட்டும் அடிக்க மாட்டார்! - ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் காமெடி ஏரியாவில் வடிவேலுவுக்கு என்று தனி இடம் உண்டு. கன்வுடமணி - செந்தில் என்ற காமெடி கூட்டணியை உடைத்து, தனித்துவமான தனது காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்தவர், பிறகு தன்னை பார்த்தாலே மக்கள் சிரிக்கும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
வடிவேலுவின் காமெடி காட்சிகளில் இடம்பெறும் சில நடிகர்களும், அவர்கள் பங்குக்கு நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பார்கள். அப்படி அந்த குழுவின் முக்கியமானவராக திகழ்ந்தவர் ’சாரப்பாம்பு’ சுப்புராஜ். காமெடிக் காட்சிகளில் நடிக்கும் போது சில இடங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை வடிவேலு அடிப்பது போல காட்சி வரும், அவரும் அடிப்பார். ஆனால், யாரை அடித்தாலும், சுப்புராஜை மட்டும் அவர் இதுவரை அடித்ததில்லை, இனியும் அடிக்கவும் மாட்டார்.
அதற்கு காரணம், சுப்புராஜ் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை தான். அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சுப்புராஜ், யார், இவர் என்று யோசிக்கிறீர்களா?, வெறும் காமெடி நடிகராக அறியப்பட்ட சுப்புராஜ், பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல பெரிய இயக்குநர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். 43 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர், இயக்கிய ஒரு படம் இன்னும் ரிலீஸாகமல் இருக்க, மனுஷன் கிடைத்த நடிப்பு வாய்ப்பை பயன்படுத்தி அதில் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
”போடா போடா புண்ணாக்கு” பாடலில் வடிவேலுவை நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியதும் சுப்புராஜ் தான். அதுமட்டும் அல்ல, என் ராசாவின் மனசுல படத்துல ராஜ்கிரண ஹீரோவாக போடாலாம்னு, ஐடியா கொடுத்ததும் இவர் தானாம்.
சுப்புராஜை இளையராஜா பார்க்கும் போதெல்லாம், “பெரிய இயக்குநரா வருவேன்னு நினேச்சேன், இப்படி ஆயிட்டியே” என்று வருத்தப்படுவாராம். அந்த அளவுக்கு சினிமா அனுபவம் கொண்டவர் இந்த சுப்புராஜ்.
தற்போது பேய் படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர், இனி வடிவேலுவுடன் நடிக்கவே மாட்டேன், அவராக அழைத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன், என்று கூறுகிறார். காரணம், வடிவேலு விஜயகாந்தை திட்டியது தானாம்.