Jan 20, 2018 12:01 PM
எம்.ஜி.ஆர் 100 ஆம் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட ‘வாட்ஸ் அப்’ பஸ்ட் லுக்!

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ்.பி.கே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் மற்றும் செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் படம் ‘வாட்ஸ் அப்’. இதில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். ரஷீத் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.