Apr 12, 2019 07:37 PM

உல்லாசமாக ஊர் சுற்றும் யாஷிகா ஆனந்த்! - யாருடன் தெரியுமா?

உல்லாசமாக ஊர் சுற்றும் யாஷிகா ஆனந்த்! - யாருடன் தெரியுமா?

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால், முன்னணி நாயகியாகிவிடலாம் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தில் தான் முடிந்தது. தற்போது இருட்டு அறை போன்ற படங்களில் நடிக்க தான் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வருகிறதாம்.

 

அத்துடன், காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக அல்லது இரண்டாம் நாயகியாக அதுவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும், என்று தான் அவரை அனுகுகிறார்களாம். இதனால், ரொம்பவே அப்செட்டான யாஷிகா, கிடைக்கும் சில வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர் மஹத்துடன் உல்லாசமாக யாஷிகா ஆனந்த் ஊர் சுற்றி வருகிறார். அவர்கள் ஜோடியாக பைக்கில் சுற்றும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மஹத்தும், யாஷிகாவும் காதலிப்பதாக அறிவித்தார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும், அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கினாலும், தற்போது ஒன்றாக ஊர் சுற்றுவதால் மீண்டும் காதலை வளர்க்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம், யாஷிகாவும், மஹத்தும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்களாம், அந்த படத்தின் புகைப்படமாகவும் அது இருக்கலாம், என்றும் கூறப்படுகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Yashika Anand