Apr 05, 2019 11:04 AM

நயன்தாராவை நக்கலடித்த யோகி பாபு! - வைரலாகும் புகைப்படம்

நயன்தாராவை நக்கலடித்த யோகி பாபு! - வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உயர்ந்திருக்கும் யோகி பாபு, பல படங்களில் ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் நடிப்பதோடு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாக உருவாகி வரும் படம் ‘ஜாம்பி’.

 

யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் ஒரு பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது.

 

ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி கதை அமைக்கப்பட்டிருப்பதால், படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. 

 

பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இப்படத்தை புவன் நல்லான்.ஆர் இயக்க, எஸ்3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துகுமாரும் தயாரிக்கிறார்கள். படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் ஒரு காட்சியில் யோகி பாபு நயன்தாராவை நக்கலடிக்கும் விதத்தில், ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா அணிந்த பாவாடை, சட்டை உடையை அணிந்துக் கொண்டு யாஷிகா ஆனந்துடன் ஜோடியாக இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூகவ் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Yogi Babu and Yashika Anand