Apr 09, 2019 10:54 AM

அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் இளம் ஹீரோயின்! - ரசிகர்கள் விமர்சனம்

அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் இளம் ஹீரோயின்! - ரசிகர்கள் விமர்சனம்

பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான் கானை வைத்து ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயினான ஆலியா பட் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கடுப்பானதோடு, 53 வயதாகும் சல்மான் கானுக்கு, 26 வயதாகும் ஆலியா பட் ஜோடியா?, இந்த ஜோடி பொருத்தமாகவே இருக்காது, அப்பா - மகள் சேர்ந்து நடித்தது போல இருக்கும், பன்சாலி இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தார், என்று கண்டமேனிக்கு ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.

 

Salman Khan

 

இந்த நிலையில், ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளித்திருக்கும் நடிகை ஆலியா பட், யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. சல்மான் கானுடன் நடிப்பது குறித்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பன்சாலி சாரும், சல்மான் கானும் இதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

 

நமக்கு பல நல்ல படங்களை அளித்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவரின் கதை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு யூகிக்கக்கூடாது, என்று தெரிவித்துள்ளார்.

 

Director Sanjay Leela Pansali

 

அப்பா வயது ஹீரோக்களுடன் இளம் நடிகைகள் ஜோடி போடுவது புதிதான விஷயமல்ல, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ஸ்ரேயா, திரிஷா என்று எத்தனையோ இளம் ஹீரோயின்களோடு ஜோடி போடுகிறார், அதேபோல், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி பாலிவுட்டிலும் இது சகஜமான ஒன்று தான் என்றாலும், சல்மான் கான் - ஆலியா பட் விவகாரத்தில் மட்டும் கண்டத்தை எதிர்கொள்வது வியப்பாக இருக்கிறது.