’அனுக்கிரகன்’ திரைப்பட விமர்சனம்

Casting : Vijay Krishna, Murali Radhakrishnan, Raaghuvan, Shruthi Ramakrishnan, Kishore Rajkumar, Deepa Umapathy
Directed By : Sundar Krish
Music By : Rehan
Produced By : Sakti Cine Productions - Dr. Muruganandam Veeraragavvan, Shanmuga Priya Muruganandam
தனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் தனது தந்தைக்கு அவரது சிறு வயதில் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கவில்லை என்பதை அறியும் 8ம் வகுப்பு படிக்கும் மகன், தந்தையின் சிறு வயது ஆசைகளை நிறைவேற்ற வேண்டும், என்று நினைக்கிறார். அது சாத்தியம் இல்லை என்றாலும், அதையே தனது லட்சியமாகவும் கொள்ளும் சிறுவன், டைம் டிராவல் மூலம் தனது தந்தையின் சிறு வயது காலக்கட்டத்திற்கு பயணிக்கிறார். அவரது டைம் டிராவல் பயணம் எப்படி நிகழ்ந்தது?, அந்த பயணத்தின் மூலம் அவர் நினைத்தபடி தந்தையின் ஆசைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் ‘அனுக்கிரகன்’.
தந்தைகளின் கஷ்ட்டங்களை யோசித்து கூட பார்க்காத பிள்ளைகளுக்கு நடுவில், அவரது கஷ்ட்டமான சிறு வயது வாழ்க்கையை நினைத்து கலங்கும் கதாபாத்திரத்தில் சிறுவன் ராகுவன் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் தங்களது கனவு பயணங்களில் இருந்து விலகியவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் கிருஷ்ணா, சிறப்பாக நடித்திருக்கிறார்.
தந்தையின் இளமை காலத்தில் அவருடன் நண்பனாக பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முரளி ராதாகிருஷ்ணன், தந்தையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரது வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க வேண்டும், என்ற எண்ணத்தை வெளிக்காட்டும் இடங்களில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
விஜய் கிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், பாரி வாசன், ஹேமன் முருகானந்தம், தீபா உமாபதி, கிஷோர் ராஜ்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் இருக்கும் வேறுபாட்டை மிக சரியாக கையாண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் ரேஹன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் டைம் டிராவலர் கதையை எந்தவித குழப்பமும் இன்றி பார்வையாளர்களுக்கு எளிமையாக புரிய வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார் படத்திற்கு பெரும் பலமாக பயணித்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சுந்தர் கிரிஷ், தந்தையின் சிறு வயது ஆசையை நிறைவேற்றும் மகனின் டைம் டிராவல் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
டைம் டிராவலர் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், அறிவியலை தவிர்த்து ஆன்மீகம் மற்றும் பூர்வ ஜன்ம புண்ணியம் ஆகியவற்றை டைம் டிராவலுக்கான காரணமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சுந்தர் கிரிஷ், அவற்றை எளிமையாக சொன்னாலும், ஏற்றுக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.
வித்தியாசமான யோசனையை, பலமான கதைக்கருவாக உருவாக்கி, சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சூப்பரான அறிவியல் ஃபேண்டஸி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் கிரிஷ்.
மொத்தத்தில் ‘அனுக்கிரகன்’ அட்ரா சக்க...என்று சொல்ல வைக்கும் அறிவியல் படம்.
ரேட்டிங் 3.5/5