May 09, 2025 06:30 AM

’கீனோ’ திரைப்பட விமர்சனம்

076fe28c26d17c4cfdc3d26d1e2e2dad.jpg

Casting : Mahaathaaraa Bagavath, Renu Sathish, Gantharvaa, Master Shiva Suganth, RK Divakar, Rajesh Gopichetty, Sundar Annamalai, Kannadasan, Sivam

Directed By : RK Divakar

Music By : RK Divakar

Produced By : Ghantharvaa Celluloid Creators - Krithika Ganthi

 

சிறுவன் சிவா சுகந்த், கனவில் ஒரு உருவத்தைப் பார்க்கிறார். தன்னை கீனோ என்று சொல்லிக் கொள்ளும் அந்த உருவம், தன்னுடன் வா, என்று சிறுவனை அழைக்கிறது. அதன் பிறகு, சிறுவனின் நிஜத்திலும் கீனோ அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது. சிறுவனின் பிரச்சனை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொண்டு, தீய சக்தி தான் மகனை பயமுறுத்துவதாக நினைத்து அதனை விரட்ட பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அனைத்தும் வீண் போக, இறுதியில் சிறுவனின் பிரச்சனையை அவர்கள் எப்படி தீர்த்தார்கள்?, சிறுவனை மிரட்டும் கீனோ யார்?, அதன் பின்னணி என்ன? என்பதை சொல்வது தான் ‘கீனோ’.

 

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் சிவா சுகந்த் மற்றும் அவரது பெற்றோர்களாக நடித்திருக்கும் மஹாதாரா பகவத் மற்றும் ரேனு சதிஷ், எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். 

 

கந்தர்வா, ஆர்.கே.திவாகர், ராஜேஷ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன், சிவம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும், நட்சத்திரங்களாக அல்லாமல் கதாபாத்திரங்களாக வலம் வந்திருக்கிறார்கள்.

 

ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு மற்றும் கிருத்திகா காந்தியின் படத்தொகுப்பு இரண்டுமே எளிமையாக இருந்தாலும், படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது, என்ற எதிர்பார்ப்பை படம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கும் ஆர்.கே.திவாகர், வெற்றிடத்தை கண்டு அச்சப்படும் ஒரு உணர்வுக்கு கீனோ என்ற உருவம் கொடுத்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். கீனோ யார்? என்ற கேள்வி பார்வையாளர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, அதன் பின்னணி மற்றும் தீர்வு மூலம் வித்தியாசமான படம் பார்த்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

 

மொத்தத்தில், ‘கீனோ’ பயத்திற்கான தீர்வு.

 

ரேட்டிங் 3/5