’குமார சம்பவம்’ திரைப்பட விமர்சனம்

Casting : Kumaran Thangaraj, Payal Radhakrishnan, GM Kumar, Kumaravel
Directed By : Balaji Venugopal
Music By : Achu Rajamani
Produced By : Venus Infotainment - K.J.Ganesh
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன், வீட்டில் ஒரு மரணம் நடக்கிறது. அந்த மரணம் கொலையாக இருக்கலாம், என்று சந்தேகிக்கும் காவல்துறையின் சந்தேகப்பார்வை குமரன் தியாகராஜன் மீது திரும்புகிறது. இயக்குநராக வேண்டிய தன் மீது விழும் பழியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நாயகன், அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளும், அவரது சினிமா கனவு பலித்ததா? இலையா ? என்பதை சொல்வது தான் ‘குமார சம்பவம்’.
நாயகனாக நடித்திருக்கும் குமரன் தியாகராஜன், அனைத்து உணர்வுகளையும் திறம்பட கையாண்டிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதோடு, அனைத்து விதமான உணர்வுகளையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். நல்ல கதைகளை தேர்வு செய்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வரலாம்.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணாவுக்கு குறைவான வேலை என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமரவேல், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக வரும் பாலசரவணன்,மாமாவாக வரும் வினோத் முன்னா, தாத்தாவாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார்,சிபிஐ அதிகாரி வினோத் சாகர், காவல்துறை அதிகாரி சிவா ஆனந்த் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேடத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகள் மற்றும் கதபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்களத்தின் தன்மையை கண்களில் கொண்டு சேர்க்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், சந்தர்ப்பம் அமைந்தால் சாமன்யனும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் வகையில் செயல்படுவான், என்பதை திரைத்துறையில் பயணிக்கும் ஒருவரை வைத்து சொல்லியிருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையாக படம் நகர்ந்தாலும், சில இடங்களில் பார்வையாளர்களை சிந்திக்கவும் வைத்து, தான் சொல்ல வந்ததை திறம்பட சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
மொத்தத்தில், ‘குமார சம்பவம்’ பெரிய சம்பவம் இல்லை என்றாலும், பார்க்கலாம்.
ரேட்டிங் 2.9/5