Dec 11, 2021 06:21 AM

’முருங்கைக்காய் சிப்ஸ்’ விமர்சனம்

d52fe05376cc8bad06c0337102e958cf.jpg

Casting : Shanthnu Bhakyaraj, Athulya Ravi, K. Bhagyaraj, Urvashi, Yogi Babu

Directed By : Srijar

Music By : Dharan Kumar

Produced By : Libra Productions – V.C Ravindharan

 

நாயகன் சாந்தனுவுக்கும், நாயகி அதுல்யாவுக்கும் திருமணமாகிறது. முதலிரவில் உடலுறவில் ஈடுபட்டால் ரூ.300 கோடி குடும்ப சொத்து கிடைக்காது, என்ற உண்மை சாந்தனவுக்கு தெரிய வருகிறது. அதே போல், முதலிரவில் கணவனுடன் இணையாவிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் தோஷம் இருப்பது அதுல்யாவுக்கு தெரிய வருகிறது.

 

இதனால், முதலிரவு அன்று கட்டுப்பாடுடன் இருந்து உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்கும் முயற்சியில் சாந்தனு ஈடுபட, முதலிரவில் கணவனுடன் இணைய வேண்டும் என்பதில் அதுல்யா தீவிரம் காட்டுகிறார். இறுதியில் இவர்கள் முதலிரவில் இணைந்தார்களா, இல்லையா என்பதை ஒரே அறையில் வைத்து சொல்வது தான் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.

 

கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கும் சாந்தனு, முதலிரவா அல்லது 300 கோடி ரூபாய் சொத்தா, என்று தடுமாறும் இடங்களில் ரசிக்க வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா சாந்தனவுக்கு ஏற்ற ஜோடியாக இருப்பதோடு, தனது இளமையை நடிப்பிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்தாலும், காமெடி என்ற பெயரில் பல இடங்களில் நம்மை கடுப்பேற்றவும் செய்திருக்கிறார்கள்.

 

ஒரே அறையில் நடக்கும் கதை என்றாலும் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியுள்ளார். தரண் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் துள்ளல் ரகம்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீஜர், முதலிரவை கருவாக கொண்டு ஒரே இரவில், ஒரே அறையில் நடப்பது போன்று திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டும்படி இருந்தாலும், அதிகமான இரட்டை அர்த்த வசனங்களை பயன்படுத்தியிருப்பது முகம் சுழிக்க வைக்கிறது.

 

ரொமான்ஸ் என்ற யானையை காமெடி என்ற சங்கிலி மூலம் கட்டி இழுக்க முயற்சித்திருக்கும் இயக்குநரின் முயற்சி பல இடங்களில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல், முதலிரவு பற்றிய போரடிக்கும் அறிவுரைகள் படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.

 

மொத்தத்தில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ சுவை இல்லை.

 

ரேட்டிங் 2.5/5