Jun 22, 2019 01:11 PM

’பக்கிரி’ விமர்சனம்

f32d632b9a30f3f3d52d1cdfd77175ca.jpg

Casting : Dhanush

Directed By : Ken Scott

Music By : Nicolas Errera

Produced By : Gulzar Inder Chahal, Saurabh Gupta, Samir Gupta

 

தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ரானரி ஜார்னி ஆஃப் ஃபகிர்’ (The Extraordinary Journey of the Fakir) படத்தின் தமிழ் வெர்சன் தான் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை கென் ஸ்காட் இயக்கியிருக்கிறார்.

 

தமிழ் நடிகர் ஒருவரது சர்வதேச திரைப்படமான இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

 

அப்பா இல்லாமல் வாழும் தனுஷ், சிறு வயதில் இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு குற்றங்களை செய்து வாழ்ந்து வருகிறார். அவரது அம்மா இறக்கும் தருணத்தில் அவரது தந்தை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருப்பதை அறிந்துக் கொள்ளும் தனுஷ், பணம் சேர்த்து வைத்து தனது அப்பாவை சந்திக்க தனது அம்மாவின் அஸ்தியுடன் பாரீஸ் செல்கிறார். பாரீஸ் வந்ததும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறார்.

 

இதற்கிடையே, சூழ்நிலை காரணமாக பாரீஸில் இருந்து இங்கிலாந்து செல்லும் தனுஷ் அங்கு தான் சந்திக்கும் புதிய சூழ்நிலையாலும், மக்களாலும் இன்னும் சில நாடுகளுக்கு பயணிக்க, பாரீஸில் இருக்கும் தனது அப்பாவை சந்தித்தாரா, அவரது காதல் கைகூடியதா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதை சாதரணமானதாக தெரிந்தாலும், தனுஷின் பலதரப்பட்ட நடிப்பால் படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்துவிதமான நடிப்புகள் மூலம் முழு படத்தையும் தோளில் தூக்கி சுமக்கும் தனுஷ் ஒரு பக்கம் நம்மை கவர்வது போல, மறுபுறம் கதை பல நாடுகளுக்கு பயணித்து கவர்கிறது.

 

Dhanush in Pakkiri

 

உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகத்தை சுற்றிக் காட்டுவது மட்டும் இன்றி, பல நாடுகளின் சாதாரண மக்களையும், அவர்களது வாழ்வியலையும் எதார்த்தமாகவும், ரசிக்கும்படியாகவும் சொல்லியிருக்கிறது.

 

இதுவரை நாம் பார்த்த ஹாலிவுட் படங்களை தாண்டி, ஒரு வாழ்வியலை படிக்கும் புத்தகம் போல ரொம்பவே அமைதியாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் நகரும் இந்த படம், நிச்சயம் குடும்பத்தோடு பார்ப்பதற்கான சரியான படமாக இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘பக்கிரி’ சாதாரண மனிதரின் சுவாரஸ்யமான வாழ்க்கைப் பயணத்தை, படம் பார்ப்பவர்களும் உணரக்கூடிய பீல் குட் படமாக இருக்கிறது.

 

ரேட்டிங் 4/5