Jun 23, 2023 06:02 PM

‘ரெஜினா’ திரைப்பட விமர்சனம்

004da8fd250a00a31c693826209fb8f0.jpg

Casting : Sunaina Ananth Nag, Ritu Mantra, Vivek Prasanna, Nivas Adithan, Bava Chelladurai, Dheena, Gajaraj

Directed By : Domin DSilva

Music By : Sathish Nair

Produced By : Yellow Bear Productions LLP - Sathish Nair

 

கணவனின் கொலைக்கு பழி தீர்க்க துடிக்கும் பெண்ணின் துணிச்சலான பயணம் தான் ‘ரெஜினா’ படத்தின் கதை. 

 

ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சுனைனா, முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிப்பதால் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால், அந்த வார்த்தைகளில் எந்த வித உணர்வும் இல்லாமல் ஏதோ மனப்பாடும் செய்து ஒப்பிப்பது போல் தான் இருக்கிறது. கொலை செய்யப்பட்ட கணவனை நினைத்து கதறும் காட்சிகளிலும், கணவனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக களத்தில் இறங்கி மிரட்டும் காட்சிகளிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

 

ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் அதித்தன், பாவா செல்லதுரை, தீனா, கஜராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை முழுமையாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பவி கே.பவன், படம் முழுவதையும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

 

சதிஷ் நாயரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது.

 

படத்தொகுப்பாளர் டோபி ஜான் காட்சிகளை வேகமாக நகர்த்தினாலும், ஏதோ பெரிய படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் டோமின் டி சில்வா, வழக்கமான ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் கதையை நாயகியை மையப்படுத்தி சொல்லியிருக்கிறார். 

 

சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மட்டுமே புதிதாக இருக்கிறது, மற்றபடி திரைக்கதை மற்றும் காட்சிகள் அனைத்தும் பழைய பாணியில் தான் பயணிக்கிறது.

 

மொத்தத்தில், வழக்கமான பழிவாங்கும் கதையை அதே பழைய பார்முலாவில் சொல்லி தூங்க வைக்கிறது இந்த ‘ரெஜினா’.

 

ரேட்டிங் 2.5/5