Feb 04, 2023 12:18 PM

’ரன் பேபி ரன்’ திரைப்பட விமர்சனம்

c91c12e2763ed69b0a062f63ed9db63a.jpg

Casting : RJ Balaji, Aishwarya Rajesh, Isha Talwar, Shmruthi Venkat, Joe Malluri, Radhika Sarathkumar, Pagavathi, Thamizh

Directed By : Jiyen Krishnakumar

Music By : Sam CS

Produced By : Prince Pictures - Lakshman Kumar

 

வங்கி ஊழியரான ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் மூலம் தனக்கு சம்மந்தமே இல்லாத பிரச்சனையில் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும் போது, மேலும் சில பிரச்சனைகளில் ஆர்ஜ்.ஏ பாலாஜி சிக்கிக்கொள்ள அதன் மூலம் அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. அந்த பிரச்சனைக்கு மூலக்காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்து அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘ரன் பேபி ரன்’.

 

ஆர்ஜே பாலாஜி, இதற்கு முன்பு சில படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தாலும், காமெடி என்ற போர்வை மீது தான் பயணப்பட்டார். ஆனால், இந்த படத்தில் காமெடி நடிகர் என்ற பிம்பம் எந்த இடத்திலும் தெரியாதவாறு, முழுக்க முழுக்க கதையின் நாயகனாக வலம் வருகிறார். சாதாரண மனிதன் வாழ்க்கையில் வரும் எதிர்பாராத பிரச்சனை, அதனால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை தனது நடிப்பில் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வரும் காட்சிகள் குறைவு தன என்றாலும் அவருடைய கதாபாத்திரம் தான் முழு கதையையும் நகர்த்தி செல்கிறது.

 

பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இஷா தல்வார், ஸ்முருதி வெங்கட் ஆகியோர் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

 

ராதிகா சரத்குமார், ஹரிஷ் பெராடி, விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், தமிழ், நாகிநீடு, ஜோ மல்லூரி, ஜார்ஜ் மரியன், ராஜ் ஐயப்பன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா லைவ் லொக்கேஷன்களில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முழு படத்தையும் லைவாக நகர்த்தி செல்கிறார். 

 

சாம் சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. தன்னால் முடிந்த அளவுக்கு காட்சிகளின் விறுவிறுப்பை இசை மூலம் அதிகரிக்க செய்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஜியன் கிருஷ்ணகுமார், ஏற்கனவே பார்த்த சஸ்பென்ஸ் ஜானர் கதையை யூகிக்க முடியாதபடி புதுவித திரைக்கதையோடு, சுவாரஸ்யமான காட்சிகளோடும் விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கிறார்.

 

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பது படத்திற்கு சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதி முழுவதும் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த சுவாரஸ்யமான படமாக நகர்கிறது.

 

மொத்தத்தில், ‘ரன் பேபி ரன்’ விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

 

ரேட்டிங் 3/5