May 22, 2020 02:45 PM

நான்கு பெரிய படங்கள்! - தயாரிப்பு நிறுவனத்தின் லேட்டஸ் அப்டேட்

நான்கு பெரிய படங்கள்! - தயாரிப்பு நிறுவனத்தின் லேட்டஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் முக்கியமான நான்கு திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், தங்களது தயாரிப்பில் உள்ள படங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது, என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சினிமா திரையரங்கங்கள் திறக்கப்பட்டவுடன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

 

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கல் நிறைவடைந்த நிலையில், இன்னும் 25 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாம். திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளதாம்.

 

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. ‘நானும் ரவுடி தான்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இந்த கூட்டணியின் படம் என்பதால், படப்பிடிப்பு துவங்குவதுற்கு முன்பே பெரும் எதிர்ப்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படி நான்கு பெரிய படங்களை தயாரித்து வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், கொரோனாவின் முடிவுக்காக காத்திருக்கிறது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த அரசு அனுமதி கிடைத்தவுடன், நான்கு படங்களின் எஞ்சிய பணிகளை முடித்துவிட்டு, ஒவ்வொரு படமாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.