Aug 01, 2020 04:32 PM

இப்படியும் நடக்கும்! - மக்களை எச்சரிக்கும் ‘தக்கன பிழைக்கும்’

இப்படியும் நடக்கும்! - மக்களை எச்சரிக்கும் ‘தக்கன பிழைக்கும்’

கொரோனா வைரஸ் பரவலாலும், அதை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கினாலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதுக்கப்பட்டுள்ள நிலையில், குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் மக்கள் எச்சரிக்கையுடனும், தகுந்த பாதுகாப்புடனும் இருக்குமாறு, அறிவுறுத்திய தமிழக காவல் துறை, இது குறித்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

 

காவல் துறையின் இந்த அறிவிப்பு இப்போது தான் வெளியானாலும், இதை கடந்த 5 வருடங்களுக்கு முன்பே குறும்படம் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார் பத்திரிகையாளர் கா.ராஜீவ் காந்தி. ‘தக்கன பிழைக்கும்’ தலைப்பில் ராஜீவ் காந்தி, 5 வருடங்களுக்கு முன்பு இயக்கிய இந்த குறும்படத்தில், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கையாளும் நூதன முறை பற்றியும், அதில் இருக்கும் பயங்கரத்தை பற்றியும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

 

தற்போதைய சூழலில் மக்கள் தங்களுக்கு வரும் நேரடி மற்றும் மறைமுக ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, எப்படி விழிப்பாக இருப்பது குறித்து இக்குறும்படத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜீவ் காந்தி, அதை விழிப்புணர்வு மெசஜாக மட்டும் அல்லாமல், விறுவிறுப்பான 15 நிமிட படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

Rajiv Gandhi

 

விஷ்வா, நிருபன், புவனேஷ்வரி, காவேரி மாணிக்கம், திரைப்பட தயாரிப்பாளர் கஸாலி ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் படமாக்கப்பட்டிருப்பது கூதல் சிறப்பாகும்.

 

குறிப்பாக ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணாவின் பணி அசர வைக்கிறது. அவரே படத்தொகுப்பு என்பதால் இயக்குநர் சொல்ல நினைத்ததை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். விகாஷின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. 

 

தி நெக்ஸ்ட் ஸ்டெப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த குறும்படத்தை Right Excpilit மற்றும் Delson Movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன.

 

இதோ அந்த குறும்படம்,