Apr 15, 2021 07:22 AM
’காதல் - கண்டிஷன் அப்ளை’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிலம்பரசன்

’லாக்கப்’ படத்தை தொடர்ந்து நடிகர் நிதின் சத்யா தனது ஷ்வேத் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘காதல் - கண்டிஷன் அப்ளை’. லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் இப்படத்தை ஆர்.அர்விந்த் இயக்குகிறார்.
இப்படத்தில் மஹத் ராகவேந்திரா நாயகனாகவும், சனா மக்புல் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று இப்படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரன் வெளியிட, மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒள்ளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ஜெரால்ட் படத்தொகுப்பு செய்ய, மக்கள் தொடர்பாளர் பணியை சதீஷ் கவனிக்கிறார்.