May 25, 2020 08:28 AM

மக்களிடம் அன்பு அதிகரிக்கட்டும் - நடிகர் துரை சுதாகர் ரம்ஜான் வாழ்த்து

மக்களிடம் அன்பு அதிகரிக்கட்டும் - நடிகர் துரை சுதாகர் ரம்ஜான் வாழ்த்து

இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் மசூதிகள் திறக்கப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி சமூக இடைவெளியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

 

ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாம் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், ‘களவாணி 2’ மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இஸ்லாம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், ”அன்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாம் சகோதரர்களுக்கு வாழ்த்துகள். இந்த கொடிய கொரோனா காலத்தில் மன அமைதியை இழந்திருக்கும் மக்களுக்கு அல்லாஹ்வின் அருள் மூலம் அமைதி கிடைப்பதோடு, மக்களிடம் அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் போன்றவை அதிகரிக்க வேண்டும், என்று பிரார்த்திக்கிறேன்.

 

நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்களும், துயரங்களும் விரைவில் விலகி, மீண்டும் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையோடும், சமூக இடைவெளியோடும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

தற்போது சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் துரை சுதாகர், ‘லேண்ட் லார்ட் மேக்கர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம், “பணம் இல்லாத ஏழைகள் இருக்கலாம், நிலம் இல்லாத ஏழைகள் இருக்க கூடாது” என்ற கொள்கையோடு, நிலம் இல்லாத ஏழைகளை நிலம் சொந்தக்காரர்களாக மாற்றும் புதிய முயற்சியில் விரைவில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.