Apr 09, 2018 01:18 PM

இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்!

இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்!

தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பல வெற்றிகளை குவித்து பதக்கப் பட்டியலில் 3 ம்  இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய வீரர்களின் இத்தகைய முன்னேற்றத்தை பலத்துறைகளைச் சேர்ந்தவர்களும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் மாதவன் கூடுதலாகவே கொண்டாடி வருகிறார். காரணம், அவரது மகன் வேதாந்தும் இந்தியாவுக்காக பதக்கம் வென்றுள்ளார்.

 

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரர் ஆவார். தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் மாதவனின் மகனும் கலந்துக்கொண்டுள்ளார். 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துக்கொண்ட வேதாந்த், மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் இந்தியாவுக்காக வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன் மூலம் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து கூறிய மாதவன், வேதாந்த் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது சரிதாவுக்கும் எனக்கும் பெருமையான தருணம் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி, எனத் தெரிவித்துள்ளார்.