Apr 15, 2018 08:34 AM

ஈழத் தலைவர் பிரபாகரன் வீட்டில் நடிகர் சதீஷ்!

ஈழத் தலைவர் பிரபாகரன் வீட்டில் நடிகர் சதீஷ்!

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வலம் வருபவர்களில் சதீஷும் ஒருவர். விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சதீஷ், சமூக வலைதளங்களில் ரொம்பவ ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ள சதீஷ், அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்து வருவதோடு, தான் சுற்றிப் பார்க்கும் இடங்களை தனது சமூக வலைதளத்திலும் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்டு ஒரு புகைப்படத்தில் ஈழத் தலைவர் பிரபாகரனின் வீடும் ஒன்று.

 

வல்வெட்டித் துறையில் உள்ள பிரபாகரனின் இல்லம் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் சதீஷ், அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.