Apr 13, 2018 11:21 AM
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது!

65 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதை ‘டூலெட்’ படம் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதுக்கு ’நகர்கிர்தன்’ படத்திற்காக ரித்தி சென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது ‘மாம்’ படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசை என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.