தமன்னாவிற்கு தாதாசாகேப் பால்கே விருது!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தற்போது சீனு ராமச்சாமி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில், பாகுபலி படத்திற்காக தமன்னாவிற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாதுறையில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் திரையுலகினருக்கு ஆண்டுதோறும் இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரில் விருது வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்காக ஏற்கனவே தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் தேர்வான நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.