May 07, 2018 08:25 AM

‘விஸ்வாசம்’ பட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது

‘விஸ்வாசம்’ பட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியின் 4 வது படமான ’விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று அஜித் ஐதராபாத் சென்றார்.

 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். 

 

கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சினிமா வேலை நிறுத்தம் போராட்டத்தினால் தடை பட்டது. போராட்டம் முடிந்த பிறகு மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் அறிவித்த நிலையில், இன்று முதல் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

 

ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இதற்காக அஜித், நேற்று ஐதராபாத் சென்றார். அவர் விமானத்தில் பயணிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.