Sep 08, 2018 10:37 AM

சன்னி லியோன் இடத்தில் அமலா பால்! - ரசிகர்கள் கோபம்

சன்னி லியோன் இடத்தில் அமலா பால்! - ரசிகர்கள் கோபம்

வெளிநாட்டு ஆபாசப் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான சன்னி லியோன், தற்போது மும்பை சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இந்திப் படங்கள் பல வற்றி கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் அவர், தமிழில் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள அமலா பால், அடுத்த சன்னி லியோன் என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

 

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கும் ‘ஆடை’ படத்தில் அமலா பால் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், அமலா பால் ஆடை இல்லாமல், காகிதங்களை உடலில் சுற்றுக் கொண்டு படு கவர்ச்சியாக, அதே சமயம் உடம்பில் ரத்த காயங்களுடன் அயுதபடி இருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த பஸ்ட் லுக் போஸ்டருக்கு, சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

 

அமலா பாலின் கவர்ச்சி குறித்து விமர்சித்த சில ரசிகர்கள், கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளையே அமலா பால் மிஞ்சிவிட்டதாக கூறியிருந்தார்கள். சிலரோ, இப்படி அதிக கவர்ச்சியில் நடிக்கும் அமலா பால் தான், அடுத்த சன்னி லியோன், என்று மோசமாகவும் அவரை விமர்சித்தனர். இப்படி விமர்சனங்கள் பல இருந்தாலும், அதை விட அமலா பாலுக்கு பாராட்டுக்களும் அதிகம் கிடைத்தது.

 

Aadai

 

இது குறித்து கருத்து தெரிவித்த அமலா பால், “படத்தின் பஸ்ட் லுக் பார்த்துவிட்டு என்னை திட்டும் ரசிகர்கள், படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார்கள், அந்த நம்பிக்கையில் தான் இந்த படத்தில் நடிக்கவே சம்மதித்தேன்.” என்று கூறியிருக்கிறார்.

 

செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் உருவாகும் ‘ஆடை’ படத்தில் அமலா பால் பலரை வழி வாங்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.