’வட சென்னை’ படத்தில் அமீர், ஆண்ட்ரியா காட்சிகள் நீக்கம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் அமீர், சமுதிரக்கனி, கிஷோர், பவன் ஆகியோரது நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி வெளியான ‘வட சென்னை’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வட சென்னையை கதைக்களமாக கொண்ட இப்படம் வட சென்னை பற்றியும், அப்பகுதி மக்களின் வாழ்க்கை மற்றும் அரசியல், கோஷ்ட்டி மோதல் ஆகியவற்றை பற்றி பேசுகிறது. மேலும், படத்தில் வட சென்னை மக்கள் கோபம் வந்தால் பேசும் வார்த்தைகளையும் இயகுநர் வெற்றிமாறன் வெளிப்படையாக படத்தில் வசனங்களாக வைத்திருக்கிறார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்.
இதற்கிடையே, வட சென்னை படத்தில் மீனவர்கள் குறித்து இடம்பெற்றிருந்த சில காட்சிகளும், வட சென்னை மக்களை காட்டிய விதத்திற்காகவும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. வட சென்னை மக்களை ரவுடிகளாகவும், அடிதடியி ஈடுபடுபவர்களாகவும் சித்தரித்திருப்பது தவறானது, என்றும் கூறி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, மக்களின் மனங்களை புன்படுத்தும் காட்சிகளை விரைவில் நீக்குவோம், என்று வட சென்னை படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்த வேறு ஒரு காட்சியை படத்தில் சேர்த்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அதேபோல், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சில வசனங்களையும் படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.