Apr 24, 2018 01:33 PM

அமெரிக்க இயக்குநர் படத்தில் ஒப்பந்தமான ஆண்ட்ரியா!

அமெரிக்க இயக்குநர் படத்தில் ஒப்பந்தமான ஆண்ட்ரியா!

’தரமணி’ படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்தாலும் ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டான ஆண்ட்ரியா, விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுடன் நடித்தால் தான் நடிகை என்று ஏற்றுக்கொள்வீர்களா? என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 

இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘விடியும் முன்’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே.குமார் தான் அந்த இயக்குநர்.

 

இவர் சென்னை வாசியாக இருந்தாலும், தற்போது அமெரிக்க குடிமகனாக அங்கேயே செட்டிலாகி, அங்குள்ள சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய முதல் தமிழ்ப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் இவர், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை எடுக்க உள்ளாராம்.

 

ரசிகர்களை சீட்டின் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு படு சஸ்பென்ஸாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஆண்டிர்யா ஹீரோயினாகவும், பிரசன்னா ஹீரோவாகவும் நடிக்க உள்ளார்கள். முக்கிய வேடம் ஒன்றில் மடோனா செபாஸ்டியனும் நடிக்கிறாராம்.

 

வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ள இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிட உள்ளார்கள்.